/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கல்வெர்ட்' தடுப்புக்கட்டை சேதம்: சீரமைக்க கோரிக்கை
/
'கல்வெர்ட்' தடுப்புக்கட்டை சேதம்: சீரமைக்க கோரிக்கை
'கல்வெர்ட்' தடுப்புக்கட்டை சேதம்: சீரமைக்க கோரிக்கை
'கல்வெர்ட்' தடுப்புக்கட்டை சேதம்: சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 19, 2024 07:58 AM

பெண்ணாடம்: ஓ.கீரனுாரில் பாசன வாய்க்காலின் குறுக்கே புதிதாக தடுப்புக்கட்டை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடத்தில் இருந்து சுமைதாங்கி, அரியராவி, ஓ.கீரனுார் வழியாக பெ.பூவனுார் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
இச்சாலையில் ஓ.கீரனுார் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்கால் மீதுள்ள 'கல்வெர்ட்' தடுப்புக்கட்டை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்தது. இதுவரை சீரமைக்கவில்லை.
இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். எனவே ஓ.கீரனுாரில் பாசன வாய்க்காலின் குறுக்கே புதிதாக தடுப்புக்கட்டை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.