
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், நகரத் தலைவர் ஆனந்த், மாநகரத் தலைவர் பாலமுருகன், ராஜா, சுரேஷ்குமார், மணி, பாபு, ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சபரிமலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாதது, ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய கோவில் நிர்வாகம் மற்றும் கேரள அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

