நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓய்வவூதியர் சங்கத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சம்பந்தம், மாவட்ட செயலாளர் சவுந்தர ராஜன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன், துணைத் தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினர். 1.1.2017 முதல், ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும், 1.1.2017 முதல், ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் மாற்றம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.
கிளை செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

