Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி

கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி

கல்வி வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி


ADDED : ஜன 07, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2024 05:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடம், கல்வி வளர்ச்சி குறித்து, எம்.எஸ். சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சி குறித்து, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார்.

கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், எம்.ஜி.ஆர்., நகர் கிராம தலைவர் செஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை விஞ்ஞானி வேல்விழி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக, எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று, மாணவர்களிடம் கலந்துரையாடி, ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குநர் ஹரிகரன், அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், திட்ட பணியாளர் ஹேமா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us