/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் திருவிழாவில் தகராறு 4 பேர் கைது: 15 பேர் மீது வழக்கு
/
கோவில் திருவிழாவில் தகராறு 4 பேர் கைது: 15 பேர் மீது வழக்கு
கோவில் திருவிழாவில் தகராறு 4 பேர் கைது: 15 பேர் மீது வழக்கு
கோவில் திருவிழாவில் தகராறு 4 பேர் கைது: 15 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2024 08:07 AM
வடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே கஞ்சமநாதன்பேட்டையில் கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேரை போலீசார் கைது செய்தனர்
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கஞ்சமநாதன்பேட்டை, மாரியம்மன் கோவில் திருவிழாவில் கடந்த, 17ம் தேதி சாமி ஊர்வலமாக வேலன் பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளது. இரவு 8:30 மணிக்கு சாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படும் போது, விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், 19, அவரது நண்பர்கள் ரகுவரன், 25, கிஷோர், 17, மற்றும் சிலர் பீப்பி வாங்கி வேகமாக ஊதியுள்ளனர்.
இதனை கஞ்சமநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகவேல் மகன் ராஜதுரை ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு பிரிவினராக மோதிக் கொண்டனர்.
இது குறித்து ராஜதுரை சகோதரர் கார்த்திகேயன், 23, குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்த, ரஞ்சித், 19, ரகுவரன், 24, சிந்தனை செல்வன், 25, சுபாஷ், 17, குமார், 35, உட்பட, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ரஞ்சித், 19, சுபாஷ், 17, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ரஞ்சித், 19, கொடுத்த புகாரின் பேரில் ராஜதுரை, 21, அவரது சகோதரர் கார்த்திகேயன், 23, பிரகாஷ், 23, மோகன்ராஜ், 20, செல்வகுமார், 20, ஆகிய, 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ், 20, செல்வகுமார், 21, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க கஞ்சமநாதன்பேட்டை, விருப்பாட்சி அருகே கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

