/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ஜ., பாத யாத்திரையில் பங்கேற்க மாவட்ட தலைவர் மருதை அழைப்பு
/
பா.ஜ., பாத யாத்திரையில் பங்கேற்க மாவட்ட தலைவர் மருதை அழைப்பு
பா.ஜ., பாத யாத்திரையில் பங்கேற்க மாவட்ட தலைவர் மருதை அழைப்பு
பா.ஜ., பாத யாத்திரையில் பங்கேற்க மாவட்ட தலைவர் மருதை அழைப்பு
ADDED : ஜன 23, 2024 11:13 PM

ஸ்ரீமுஷ்ணம் : கடலூர் மாவட்டத்திற்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வருகை குறித்து பா.ஜ., கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை விடுத்துள்ள அறிக்கை:
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' பாத யாத்திரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக மக்களுக்கு உண்மையான விடியலை கொடுக்க கூடிய, நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, ஏழை எளிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு காட்டுமன்னார்கோவில் எச்.பி. பெட்ரோல் பங்க் - அருகே துவங்கி , பூக்கடை நான்கு முனை சந்திப்பில் முடிவடையும்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு பெண்ணடாம் கிழக்கு வால்பட்டறையில் துவங்கி பெண்ணடாம் பேருந்து நிலையத்தில் முடிவடையும். மீண்டும் நாளை 25-ந் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சிதம்பரம் வைப்புச்சாவடி அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி , தெற்கு வீதி, மேலவீதி வழியாக கஞ்சி தொட்டி முனையில் முடிவடையும், தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் புவனகிரி பாலக்கரை பகுதியில் துவங்கி புவனகிரி பேருந்து நிலையத்தில் முடிவடையும்.
நமது மாநில தலைவர் இந்தப் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பொதுமக்களை சந்திக்க வருகை தருகிறார். மாநில தலைவரை வரவேற்க தாமரை சொந்தங்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேற்கண்ட இரண்டு நாட்கள் நிகழ்ச்சியிலும் பா.ஜ.. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பாதயாத்திரையை வெற்றியாத்திரையாக மாற்றவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

