/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 13ம் தேதி துவக்கம்: மனுக்கள் அளித்து பயன் பெற அழைப்பு
/
மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 13ம் தேதி துவக்கம்: மனுக்கள் அளித்து பயன் பெற அழைப்பு
மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 13ம் தேதி துவக்கம்: மனுக்கள் அளித்து பயன் பெற அழைப்பு
மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் 13ம் தேதி துவக்கம்: மனுக்கள் அளித்து பயன் பெற அழைப்பு
ADDED : மே 10, 2025 12:29 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் அனைத்து தாலுகாக்களிலும் வரும் 13ம் தேதி துவங்குகிறது.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், வேப்பூர் என, 10 தாலுகாக்கள் உள்ளன. அனைத்து தாலுகாவிலும் வருவாய் தீர்வாயம் வரும் 13ம் முதல் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதெடார்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீமுஷ்ணத்தில் வரும் 13ம் தேதி வருவாய் தீர்வாயம் எனது தலைமையில் நடக்கிறது. புவனகிரியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சிதம்பரத்தில் சப் கலெக்டர் கிஷன்குமார், கடலுாரில் ஆர்.டி.ஓ., அபிநயா, விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, பண்ருட்டியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) பானுகோபாலன், திட்டக்குடியில் உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், குறிஞ்சிப்பாடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா, காட்டுமன்னார்கோவிலில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜி தலைமையிலும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது.
திருவந்திபுரம் குறுவட்டத்திற்குட்பட்ட தொண்டமாநத்தம், கோதண்டராமபுரம், பாதிரிக்குப்பம், கருப்படித்துண்டு, கூத்தப்பாக்கம், நடுவீரப்பட்டு, சேடப்பாளையம், செம்மங்குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களில் 13ம் தேதியும், 14ம் தேதி ராமாபுரம், கெங்கமநாயக்கன்குப்பம், அன்னவல்லி, சென்னப்பநாயக்கன்பாளையம், அரிசிபெரியாங்குப்பம், வெட்டுக்குளம், மாவடிப்பாளையம், குமாரப்பேட்டை, வெள்ளக்கரை, 15ம் வானமாதேவி (வடக்கு), விலங்கல்பட்டு, வானமாதேவி (தெற்கு), திருமாணிக்குழி, திருவந்திபுரம், ஓட்டேரி ஆகிய கிராமங்களிலும் வருவாய் தீர்வாயம் நடக்கிறது.
ரெட்டிச்சாவடி குறுவட்டத்திற்குட்பட்ட பில்லாலி, குணமங்கலம், வரக்கால்பட்டு, காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம், குண்டுஉப்பலவாடி, பெரியகங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், உச்சிமேடு, சுபாஉப்பலவாடி, அழகியநத்தம் ஆகிய கிராமங்களில் 16ம் தேதியும், 20ம் தேதி களையூர், இரண்டாயிரவிளாகம், திருப்பணாம்பாக்கம், கரைமேடு, உள்ளேரிப்பட்டு, மலையபெருமாள் அகரம், பள்ளிப்பட்டு, நல்லாத்துார், மேலக்குப்பம், துாக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும் நடக்கிறது.
வரும் 22ம் தேதி கீழ்குமாரமங்கலம், ஒடலப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனுார், மதலப்பட்டு, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிகுடி, கிளிஞ்சிக்குப்பம், செல்லஞ்சேரி, காரணப்பட்டு ஆகிய கிராமங்களிலும், மஞ்சக்குப்பம் குறுவட்டத்தில் 23ம் தேதி காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆலப்பாக்கம், கம்பளிமேடு, தியாகவல்லி, திருச்சோபுரம், பச்சையாங்குப்பம், பொன்னியாங்குப்பம் ஆகிய கிராமங்களிலும் நடக்கிறது. 27ம் தேதி மருதாடு, செஞ்சி குமராபுரம், தோட்டப்பட்டு, நத்தப்பட்டு, காரைக்காடு, குடிகாடு, கடலுார் முதுநகர் ஆகிய கிராமங்களிலும், 28ம் தேதி செல்லங்குப்பம், கடலுார் முதுநகர் (முனிசிபல்), திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், வில்வராயநத்தம், உதாரமாணிக்கம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், கோண்டூர் (முனிசிபல்), கோண்டூர் (முனிசிபல் அல்லாதது), வெளிச்செம்மண்டலம், கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல்), கரையேறவிட்டகுப்பம் (முனிசிபல் அல்லாதது) ஆகிய கிராமங்களிலும் நடக்கிறது.
பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாயம் நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட வட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து தீர்வாய நாட்களில் தகுதி அடிப்படையில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் நடக்கும் வருவாய் தீர்வாயத்தில் மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.