/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிக்கம் செலுத்தும் தனிப்பிரிவு போலீசார்
/
ஆதிக்கம் செலுத்தும் தனிப்பிரிவு போலீசார்
ADDED : ஜன 10, 2024 12:07 AM
கடலுார் மாவட்டத்தில், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும், மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மூலமாக 'தனிப்பிரிவு' போலீசார் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளனர். அவர்கள், கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில நடக்கும் குற்ற சம்பவங்கள், ஜாதிய மோதல்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், மது விற்பனை, லாட்டரி விற்பனை குறித்து முன்கூட்டியே தகவலறிந்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பது இவர்களின் பணி.
இப்படி பணிப்புரியும் சிலர், ஒரே போலீஸ் நிலையத்திலேயே மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பதால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், அரசியல் கட்சியினர் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாகிவிட வாய்ப்பு ஏற்படும்.
அதனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாவட்டத்திற்குள், தனிப்பிரிவு போலீசார் மாற்றப்படுவது வழக்கம். ஆனால், தற்போது, அவர்கள் செய்யும் தவறு வெளிச்சத்திற்கு வரும்போது மட்டுமே, மாற்றப்படுகின்றனர். வழக்கமான மாறுதலில் அவர்கள் மாற்றப்படாமல், மாவட்டம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் மாற்றப்படாமல், பலரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது, தனிப்பிரிவு போலீசார் சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், பலர் ஒரே இடத்தில் பணிபுரிவதால் விரக்தியிலும் உள்ளனர்.

