/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடிகால் துார்வாரும் பணி கிடப்பில்; கிராமத்தில் தண்ணீர் புகும் அபாயம்

ADDED : மே 27, 2025 11:16 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே ஆணைவாரி ஓடை வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி பாதியிலே கிடப்பில் போட்டதால் மழை நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி ஓடை வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி பாதியிலேயே நிற்கிறது. கடந்தாண்டு தட்டானோடையில் துவங்கி தர்மநல்லுார், பெரியநற்குணம் வரை விருத்தாசலம் பொதுப்பணித்துறையும், பெரியநற்குணத்திலிருந்து சின்னகுப்பம் ஆணைவாரி வரை சிதம்பரம் பொதுப்பணித்துறையும் சேர்ந்து வாய்க்கால் துார்வாரும் பணியை செய்தது.
ஆனால், துார்வாரும் பணியை சரியாக செய்யவில்லை. கடந்த வாரம் ஒருநாள் இரவு விடிய விடிய பெய்த கோடை மழையால் விவசாய நிலங்களிலிருந்து வெளியேறி மழைநீர் ஆணைவாரி ஓடையில் தேங்கி வடியாமல் நாள் கணக்கில் நிற்கிறது. இதனால், மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து ஆணைவாரி ஓடையை முறையாக துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.