ADDED : செப் 18, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே செம்மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று விஜயமாநகரம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ் வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி செம்மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அஜித்குமாரை, 25, கைது செய்தனர்.

