ADDED : ஜன 23, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதை தடுப்பு மற்றும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவமூர்த்தி தலைமை தாங்கினார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் முன்னிலை வகித்தார். பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா பேசுகையில், மாணவர்கள் ஒற்றுமையுடன் பழக வேண்டும்.
சாதி சண்டைகள், மோதல்கள் கூடாது,மோதல்களுக்கு பின் வழக்குப்திவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும், அதுபோல் மது, குட்கா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என பேசினார்.

