/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் முன்னாள் அரசுப்பள்ளி மாணவர்கள் சங்கத்தினர் குடும்ப விழா

ADDED : ஜன 19, 2024 08:02 AM

புவனகிரி: புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் குடும்பவிழா மற்றும் மத நல்லணிக்க விழாவாக கொண்டாடினர்.
புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சமுதாய நல சங்கம் அமைத்து பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். நேற்று முன் தினம் காணும் பொங்கலை முன்னிட்டு குடும்பத்துடன் பங்கேற்று குடும்ப விழாவாக தனியார் திருமணமண்டபத்தில் கொண்டாடினர்.
சங்கத் தலைவர் சல்மான் பாரிஸ் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் தங்கவேல் வரவேற்றார்.
சங்க செயலாளர் சேஷாத்திரி, பொருளாளர் யூசுப்அலிகான் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் பள்ளியின் முன்னாள் மாணவர் வாழ்வியல் பயிற்சியாளர் பரமன்பச்சைமுத்து கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து, முன்னதாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றுகள் வழங்கி வாழ்த்தினார்.
சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர். விழாக்குழு தலைவர் கலைக்குமார் நன்றி கூறினார்.