/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்பு சுவர் கட்டுமானப்பணிக்கு வெள்ளாற்றில் மணல் எடுப்பு
/
தடுப்பு சுவர் கட்டுமானப்பணிக்கு வெள்ளாற்றில் மணல் எடுப்பு
தடுப்பு சுவர் கட்டுமானப்பணிக்கு வெள்ளாற்றில் மணல் எடுப்பு
தடுப்பு சுவர் கட்டுமானப்பணிக்கு வெள்ளாற்றில் மணல் எடுப்பு
ADDED : பிப் 24, 2024 06:20 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே சக்திவிளாகத்தில் வெள்ளாறில் தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக ஆற்றில் 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு அரசு விதி முறைகளின்படி மணல் குவாரிகளில் மட்டுமே மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேத்தியாதோப்பு வெள்ளாற்றில், சக்திவிளாகம் கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பு சுவர் கட்டுமானப்பணிகளுக்கு வெள்ளாற்றின்நடுவே 15 அடிமுதல் 20 அடி வரை பள்ளம் தோண்டி மணல் எடுத்து வருகின்றனர்.
கட்டுமானப்பணிகளுக்கு, அரசு விதிகளின்படி 3 அடி அழகத்திற்கு மட்டுமே மணல் எடுக்கவேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெள்ளாற்றில் ராட்சத பெக்லையன் இயந்திரங்களை கொண்டு பல அடி ஆழத்திற்கு தோண்டி மணல் எடுத்து கட்டுமானப்பணிகளை செய்து வருகின்றனர்.
கட்டுமானப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் எந்தவித அரசு அனுமதியும் பெறாமல் பல அடி ஆழம் தோண்டி மணல் எடுத்து வருகின்றது.
இதனால் வெள்ளாற்றில் உள்ள நீரோட்டம் படிப்படியாக அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வருவாய் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
பரங்கிப்பேட்டை முகத்துவாரத்திலிருந்து உப்பு நீர் சேத்தியாதோப்பு வரை வந்துள்ள நிலையில், இது போன்று அதளபாதாளம் வரை தோண்டி மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் உப்பாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு மணல் எடுப்பதை தடுத்த நிறுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

