
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் கோர்ட்டில், அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு, அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
முதன்மை சார்பு நீதிபதி கவுதமன், முகாமை துவக்கி வைத்தார். சங்க செயலாளர் மோகன், மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, சீனுவாசன், சிவக்குமார், கணேஷ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

