ADDED : ஜன 23, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விலை பட்டியல் அறிவிக்க கால தாமதம் ஆனதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று 4,000 மூட்டை உளுந்து, 10 ஆயிரம் மூட்டை நெல் ஏலத்திற்கு வந்ததால், வியாபாரிகள் விலையை இறுதி செய்வதில் தாமதமாகியது.
வழக்கமாக மதியம் 12:00 மணிக்கு விலைப்பட்டியல் அறிவிக்கும் நிலையில், நேற்று மாலை 6:00 மணியைக் கடந்தும் விலைப்பட்டியல் அறிவிக்காததால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில், மார்க்கெட் கமிட்டி முன் மறியலில் ஈடுபட்டனர்.
அரகண்டநல்லுார் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 6:15 மணியளவில் கலைந்து போகச் செய்தனர். இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

