/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ விபத்து: ரூ.20 லட்சம் சேதம்

ADDED : ஜன 23, 2024 05:09 AM
வடலூர் : வடலுார் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
கடலுார் மாவட்டம், வடலுார் பூசாலிக்குப்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது.
இக்கிடங்கு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணித்தனர்.
இதில், நகராட்சிக்கு சொந்தமான மூன்று பேட்டரி குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் என, ரூ.,20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
விபத்து குறித்து வடலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.