/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தைபூச தினத்தில் அன்னதானம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்
/
தைபூச தினத்தில் அன்னதானம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்
தைபூச தினத்தில் அன்னதானம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்
தைபூச தினத்தில் அன்னதானம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் தகவல்
ADDED : ஜன 19, 2024 08:19 AM
கடலுார்: வடலுார் ஜோதி தரிசன விழாவில் அன்னதானம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வள்ளலார் 153-வது ஜோதி தரிசன விழா வரும் ஜனவரி 25ம் தேதி வடலுாரில் நடக்கிறது.
விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் அனுமதி சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
எனவே அன்னதானம் செய்ய விரும்புவோர் ஜனவரி 22-ம் தேதிக்குள் வடலுார், வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பதிவு சான்றிதழ் பெற்ற பிறகே அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இதற்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
மேலும் தகவல் பெற உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தியின் 9443000849 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உணவு தயாரிக்குமிடம், சேமித்துவைக்குமிடம் பரிமாறுமிடம் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு உணவை சூடான நிலையில் வாழை இலை அல்லது பாக்கு மட்டை போன்றவற்றில் வழங்க வேண்டும்.
பக்தர்கள் உணவு வீணாவதை முற்றிலுமாக தவிர்க்க போதுமான அளவுக்கு மட்டுமே உணவை பெற்று சாப்பிட வேண்டும்.
உணவு உட்கொண்ட பிறகு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

