/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குளறுபடிகளின் வடிவம் இண்டியா கூட்டணி
/
குளறுபடிகளின் வடிவம் இண்டியா கூட்டணி
ADDED : ஜன 21, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.மா.கா., வாசன் பேட்டி
கடலுார்: குளறுபடிகளின் மொத்த வடிவம் இண்டியா கூட்டணி என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.
கடலுாரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் இம்மாத இறுதியில் பங்கேற்க உள்ளேன். இக்கூட்டம் முடிந்ததும் த.மா.கா., பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தலைவர்கள், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் களப்பணிகளை துவங்கி உள்ளோம்.
குறிப்பாக, மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறோம். 5 மண்டலங்களில் கூட்டம் நடந்துள்ளது. குளறுபடிகளின் மொத்த வடிவமாக இண்டியா கூட்டணி உள்ளது என்றார்.

