/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேலோ இந்தியா போட்டி விழிப்புணர்வு மாரத்தான்
/
கேலோ இந்தியா போட்டி விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஜன 14, 2024 04:36 AM

கடலுார் : கடலுாரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வரும் 19ம் தேதி முதல், 31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மினி மாரத்தான் போட்டி கடலுார் டவுன்ஹால் எதிரில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ் குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., ராஜாராம், மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கலெக்டர் அருண் தம்புராஜ், மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.
பீச் ரோடு வழியாக சில்வர் பீச் வரை மாரத்தான் போட்டி நடந்தது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.

