நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே காசு வைத்து சூதாடிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், சாமிதுரை, செஞ்சி, செல்வக்குமார் ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர்.

