ADDED : ஜன 10, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புவனகிரி அடுத்த திருவள்ளுவர் நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு நேற்று,காலை உணவு திட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென காஸ் அடுப்பில் கசிவு ஏற்பட்டதால் அனைவரும் அலறியடித்துஓடினர்.
பின், காஸ்கசிவைஊழியர்கள் தாங்களாவே சரி செய்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

