ADDED : மே 26, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு துணைத்தலைவர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ்பாபு ஆண்டறிக்கை வாசித்தார்.
திருஞானம் வரவு, செலவு கணக்கு வாசித்தார்.
தேசிய பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மாநில துணைத் தலைவர் பாலசுந்தரம் பேசினர்.
தமிழ்ச்செல்வன் கருத்துரையாற்றினார். கூட்டத்தில், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நடராஜன் நன்றி கூறினார்.

