/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் குழந்தைகள் தின கட்டுரை போட்டி
/
பெண் குழந்தைகள் தின கட்டுரை போட்டி
ADDED : ஜன 23, 2024 10:30 PM

விருத்தாசலம் : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடந்தது.
விருத்தாசலம் அருகே பெரிய நெசலுார் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார்.
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.
விருத்தாசலம் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் சிவாஜி, தமிழ் ஆசிரியர்கள் புகழேந்தி, ருக்மணி, ஜெயராணி ஆகியோர் கட்டுரை போட்டிக்கு நடுவராக செயல்பட்டனர்.
ஓவிய ஆசிரியர்கள் ராஜ்குமார், பொன்னியின் செல்வி ஆகியோர் ஓவிய போட்டிக்கு நடுவராக செயல்பட்டனர்.
இந்த போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெரும் மாணவிகளுக்கு, கடலுாரில் நடக்கும் விழாவில், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

