/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் நிறுவனத்தில் ரூ.30,000 பொருள் திருட்டு
/
தனியார் நிறுவனத்தில் ரூ.30,000 பொருள் திருட்டு
ADDED : மே 26, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் தனியார் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் வெளிச்செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி சீதா, 43; இவருக்கு செம்மண்டலம் சிட்கோ வளாகத்தில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
கடந்த 22ம் தேதி இரவு நிறுவனத்தை பூட்டி விட்டுச்சென்றார்.
நேற்று முன்தினம் காலை நிறுவனத்தை திறந்தபோது, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
புகாரின் பேரில் கட லுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து 30 வயது வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

