/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு ஊழியர் விபத்தில் பலி: சாலை மறியல்
/
அரசு ஊழியர் விபத்தில் பலி: சாலை மறியல்
ADDED : ஜன 14, 2024 06:04 AM

சிதம்பரம், : சாலை விபத்தில் அரசு ஊழியர் இறந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அடுத்த மணலுாரை சேர்ந்தவர் சக்திவேல்,37; மாற்றுத் திறனாளியான இவர், பலுாத்தங்கரை கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை பணிமுடிந்து, மூன்று சக்கர பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். நாகை - விழுப்புரம் நான்கு வழிச்சாலையில், தையாக்குப்பம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மோதி இறந்தார்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் புறவழிச்சாலையில் நடக்கும் விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தையாகுப்பம் கிராம மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

