ADDED : மார் 25, 2025 09:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றம் தொடக்க பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் குமார் தலைமை தாங்கினார். இணை தாளாளர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் லியோபெஸ்கிராவ் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலர்கள் நடராஜன், குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். விழாவை 5 ம் வகுப்பு மாணவர்கள் தொகுத்து வழங்கினர். மேல்நிலைப் பள்ளி முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.