/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோவில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
/
ஆட்டோவில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜன 21, 2024 04:54 AM

கடலுார்: கடலுாரில் ஆட்டோவில் தவறவிட்ட  44,000 ரூபாய் பணத்தை, உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கடலுார், சாவடியைச் சர்ந்தவர் புஷ்பராஜ், 33; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று சாவடியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலுார் பஸ் நிலையம் சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டபோது, ஆட்டோவில் மணிபர்சை யாரோ தவற விட்டு சென்றது தெரியவந்தது.
அதில், 44,000 ரூபாய் பணம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு, ஓட்டுனர் உரிமம் இருந்தது.  அதையடுத்து, பணம் மற்றும் ஆவணங்களை புதுநகர் போலீசில், ஆட்டோ டிரைவர் புஷ்பராஜ் ஒப்படைத்தார்.
விசாரணையில், விருத்தாச்சலம் அடுத்த பரூர் கிராமம் மருதமுத்து என்பவரின் பணம் என்பதும், ஆட்டோவில் பயணம் செய்தபோது, பணத்தை தவற விட்டதும் தெரிந்தது.
மருதமுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி முன்னிலையில் பணம் மற்றும் ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர் புஷ்ப ராஜியின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

