ADDED : மே 28, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:பீஹார் மாநிலம், சமஸ்தீஸ்பூர், சித்துவாகியை சேர்ந்தவர் அரவிந்தகுமார், 27. இவரது மனைவி லட்சுமிகுமாரி, 22. இரு குழந்தைகள் உள்ளனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பழமலைநாதர் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலைக்கு சென்றனர்.
மே 24ம் தேதி லட்சுமிகுமாரி வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தார். விருத்தாசலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அரவிந்தகுமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. லட்சுமிகுமாரி நடத்தையில் சந்தேகமடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அரவிந்தகுமார் ஒப்புக் கொண்டார். போலீசார் அரவிந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.

