/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய வழித்தடங்களில் அரசு பஸ்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
புதிய வழித்தடங்களில் அரசு பஸ்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய வழித்தடங்களில் அரசு பஸ்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதிய வழித்தடங்களில் அரசு பஸ்; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 23, 2024 10:35 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இருந்து பெரியகண்டியங்குப்பம், இருசாளக்குப்பம், கச்சிராயநத்தம், கோட்டேரி, வீரசிங்கன்குப்பம், மேற்கிருப்பு, தெற்கிருப்பு, கிழக்கிருப்பு, காட்டுக்கூடலுார் வழியாக முத்தாண்டிக்குப்பம் வரை நேற்று முதல் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இதே போல் இந்த பஸ் விருத்தாசலத்தில் இருந்து எருமனுார், தொட்டிக்குப்பம், எம்.பட்டி, எம்.பரூர், கோணாங்குப்பம், எடைச்சித்துார், காட்டுப்பரூர், பிஞ்சனுார், வலசை, எம்.அகரம், கர்னத்தம் வழியாக மங்கலம்பேட்டை வரை இயக்கப்படுகிறது.
மேலும், இந்த பஸ் முத்தாண்டிக்குப்பம் - சேலம் வரை தினசரி இரவில் ஒரு முறை இயக்கப்படுகிறது. இதன் முதல் பயண துவக்கவிழா இருப்பு கிராமத்தில் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கொடியசைத்து, பஸ் பயணத்தை துவக்கி வைத்தார்.
அப்போது, காங்., கட்சி விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித்குமார், வட்டாரதலைவர் சாந்தகுமார், லாவண்யா, ரகுபதி, தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, முருகன், தேவேந்திரன் மற்றும் காங்., கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

