/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.31 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் சிதம்பரம் வீதிகளில் அமைப்பு
/
ரூ.1.31 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் சிதம்பரம் வீதிகளில் அமைப்பு
ரூ.1.31 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் சிதம்பரம் வீதிகளில் அமைப்பு
ரூ.1.31 கோடியில் எல்.இ.டி., விளக்குகள் சிதம்பரம் வீதிகளில் அமைப்பு
ADDED : பிப் 02, 2024 12:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி சார்பில், நகர வீதிகளில் 1கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் எல்.இ.டி., மின் விளக்குகள் அமைக்கும் பணியை, நகராட்சி சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மேலும், கருணாநிதி நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 95 லட்சம் ரூபாய் செலவில் தச்சன் குளம் தூர்வாரி, நடைபாதை அமைக்கும் பணியை சேர்மன் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிகளில் நகராட்சி கமிஷனர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொறியாளர் மகாராஜன், கவுன்சிலர்கள் லதா, சுந்தரி சேகர் முன்னிலை வசித்தனர்.
நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், கல்பனா, ராஜன், அசோகன், இளைஞரணி அமைப்பாளர் அருள், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், ஒப்பந்தக்காரர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரஜினிகாந்த் பங்கேற்றனர்.