ADDED : மே 27, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு தேவையான பள்ளி சீருடைகள் தயாரிக்கும் பணியில் டெய்லர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மந்தாரக்குப்பம் கடைவீதியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான ஷூ, ஷாக்ஸ், பெல்ட், நோட்டு, புத்தகம், பென்சில் பாக்ஸ் ஆகியவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதனால் கடை வீதி பரபரப்பாக காணப்பட்டது.

