/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது
/
வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது
வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது
வேலைக்கு சென்ற வீட்டில் நகை திருட்டு: பெயிண்டர் கைது
ADDED : ஜன 19, 2024 08:08 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெயிண்டிங் வேலைக்கு சென்ற வீட்டில் ஒருசவரன் நகையை திருடிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, 42. இவரது வீட்டில் கடந்த 16ம் தேதி ஒரு சவரன் நகை திருடு போனது. இதுசம்பந்தமாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கண்ணுசாமி புகார் கொடுத்தார்.
அதன்பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடந்த 16ம் தேதி கண்ணுசாமி வீட்டில் பெயிண்டிங் வேலை செய்த விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த வேலு மகன் விக்னேஷ், 29, பெயிண்டர். நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விக்னே ைஷ கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஒருசவரன் நகையை பறிமுதல் செய்தனர்.