ADDED : மார் 26, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பெண்ணாடத்தில் நடக்க இருந்த இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்க இருந்தது. இந்த முகாம் நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.