ADDED : ஜன 23, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலக்கரை பகுதியில், ராஜேந்திரபட்டிணம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி, 62, என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

