/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் ரகசிய அறை அமைத்து மதுபாட்டில்கள் கடத்தல்
/
காரில் ரகசிய அறை அமைத்து மதுபாட்டில்கள் கடத்தல்
ADDED : செப் 19, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் , ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார், நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த ஸ்கோடா லாரா காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பின் சீட்டிற்கு கீழ், ரகசிய அறை அமைத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஓட்டி வந்த நபர் தப்பியோட முயன்றார். போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், புவனகிரி அடுத்த தீர்த்தாம்பாளையம் ராமச்சந்திரன், 43, எனத் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைது செய்து, 120 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

