/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் சாதனை
/
மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் சாதனை
ADDED : ஜன 23, 2024 04:31 AM

கடலுார் : கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், அரசு தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
கடலுார் ஸ்ரீமகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த டிப்ளமோ அரசு தேர்வில் டி.இ.இ.இ., பாடப்பிரிவில் இக்கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர் அய்யப்பன், 700க்கு 691 மதிப்பெண் மாநில அளவில் சாதனை படைத்தார்.
மேலும், முதலாமாண்டு டி.இ.இ.இ., பிரிவில் ஜெனிசன் 98.5 சதவீதம், முக்கேஷ் 97, டி.எம்.எல்.டி., பிரிவில் ராம்குமார் 95.7, இரண்டாமாண்டு டி.இ.இ.இ., பிரிவில் அய்யப்பன் 99, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஸ்ரீமதி 94, அஸ்வின் 92, மூன்றா மாண்டு டி.இ.இ.இ., பிரிவில் பிரவீன் 95, விக்னேஷ் 94, ஜெயவேல், 94, ஜாகிர் 93 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கல்லுாரியின் டி.இ.இ.இ., பிரிவு மூன்றாமாண்டு மாணவர்கள், டி.இ.சி.இ., பிரிவு இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரித் தலைவர் ரவி, துணைத் தலைவர் ராக்கவ் தினேஷ், தாளாளர் தேவகி ரவி ஆகியோர் சாதனை மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். விழாவில் முதல்வர் சின்ராஜ், மேலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

