ADDED : ஜன 19, 2024 08:00 AM

நெய்வேலி: நெய்வேலியில் அ.தி.மு.க., மற்றும் என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
கட்சியினர்,தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9 ல் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் என்.எல்.சி.,மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தொழிற் சங்கத்தின் சார்பில் தங்க நாணயம் வழங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சூரிய மூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துலிங்கம், பொருளாளர் தேவநாதன், ஒன்றிய செயலாளர்கள் வடக்குத்து கோவிந்தராஜ், கமலக்கண்ணன், பாஷ்யம், வடலுார் நகர செயலாளர் பாபு, என்.எல்.சி., அ.தி.மு.க., தொழிற்சங்க செயலாளர் கோவிந்தராஜ், தலைவர் வெற்றிவேல், பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் ஜோதி, பேராசிரியர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

