/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னையில் மினி மாரத்தான் கூட்டுறவு துறை அழைப்பு
/
சென்னையில் மினி மாரத்தான் கூட்டுறவு துறை அழைப்பு
ADDED : ஜூன் 14, 2025 11:31 PM
கடலுார் : சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025ஐ முன்னிட்டு கோவாப்தான், கூட்டுறவு மினி மாரத்தான் ஓட்டம் சென்னையில் வரும் ஜூலை 6ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் கடலுார் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி கோவாப்தான் எனப்படும் மினிமாரத்தான் ஓட்டம் வரும் ஜூலை 6ம் தேதி சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடக்கிறது.
அதில் 18 வயது முதல் 40 மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.
பந்தய துாரம் ஐந்து கி.மீ., துாரம். நுழைவுக் கட்டணம் 100ரூபாய்.
போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கடலுார் மாவட்டத்தினர் 97909-54671 என்ற மொபைல் எண்ணிலும், tncu08@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.