/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலை கல்லுாரி திறப்பு விழா எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
/
கலை கல்லுாரி திறப்பு விழா எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
கலை கல்லுாரி திறப்பு விழா எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
கலை கல்லுாரி திறப்பு விழா எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
ADDED : மே 26, 2025 11:51 PM

பண்ருட்டி : பண்ருட்டி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் வேல்முருகன், சபா ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் அரசு அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கி இந்தாண்டு முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
புதிய கல்லுாரியை சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சக்கரவர்த்தி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் வேல்முருகன், சபா ராஜேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். கூடுதல் கலெக்டர் சரண்யா, மண்டல கல்லுாரி இணை இயக்குனர் சிந்தியாசெல்வி, ஆர்.டி.ஓ., அபிநயா முன்னிலை வகித்தனர்.
விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்திசரவணன், நகர செயலாளர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுரேந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

