/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடமாடும் கொள்முதல் நிலையம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
நடமாடும் கொள்முதல் நிலையம் கலெக்டர் துவக்கி வைப்பு
நடமாடும் கொள்முதல் நிலையம் கலெக்டர் துவக்கி வைப்பு
நடமாடும் கொள்முதல் நிலையம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 23, 2024 05:37 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் நலனையொட்டி, நடமாடும் நெல்கொள்முதல் நிலையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெல் அறுவடைகள் துவங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், காட்டுமன்னார்கோவில் 34, ஸ்ரீமுஷ்ணம் 35, விருத்தாசலம் 24, சிதம்பரம் 9, திட்டக்குடி 15, புவனகிரி 7, குறிஞ்சிப்பாடி6, வேப்பூர் 12, கடலுார் 7, பண்ருட்டி 4 என மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு சன்ன ரகம் குவிண்டால் ரூ.2,310, பொதுரகம் குவிண்டால் ரூ.2,265 என கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டும் விவசாயிகள் வசதிக்காக விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் நடமாடும் நேரடி கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. நடமாடும் நேரடி கொள்முதல் நிலையம் விவசாயிகளின் அறுவடை நடக்கும் பகுதிக்கு வாகனங்களில் சென்று, நேரடியாக சென்று நெல் கொள்முதல் செய்யப்படும். நடமாடும் நேரடி கொள்முதல் நிலைய வாகனத்தை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், வேளாண் துணை இயக்குனர் ரவிச்சந்திரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

