ADDED : மே 26, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : உண்ணாமலை செட்டிசாவடி மக்கள் தேசிய ஊரக வேலை வழங்கக் கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நத்தப்பட்டு ஊராட்சி உண்ணாமலை செட்டிசாவடி மக்கள் அளித்த மனு:
நத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படுவதில்லை. இதனால் வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள குடும்பத்தினர் போதிய வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே நத்தப்பட்டு ஊராட்சியில் தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

