/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய இளைஞர் தினம்
/
ராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய இளைஞர் தினம்
ADDED : ஜன 21, 2024 04:47 AM

சிதம்பரம்: சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவிபெறும் பள்ளியில், தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் ராஜவேலு முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார். விவேகானந்தர் பொன்மொழிகள் வாசிக்கப்பட்டன.
விவேகானந்தர் வேடம் அணிந்த மாணவருக்கு பள்ளி தலைமையாசிரியர் சங்கரன் நினைவுப்பரிசு வழங்கினார்.
கவர்னர் விருதுக்கு தேர்வு பெற்ற சாரண மாணவிகள் நித்யஸ்ரீ, பிரியதர்ஷினி, பிரவினா, கரினா, ஆர்த்தி, காயத்ரி, சுருதி, பயிற்சி அளித்த சாரண ஆசிரியை வாசுகி ஆகியோரை பள்ளி செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியைகள் லலிதா, திருமகள், கலா, பச்சைக்கனி, கஸ்தூரி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

