/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் முற்றுகை
/
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் முற்றுகை
ADDED : ஜன 14, 2024 04:27 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, போலீஸ் நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் முஸ்லீம் ஒத்தவாடி தெருவை சேர்ந்த இளைஞர்கள் இருவர், நேற்று முன்தினம், அதே நெல்லிக்குப்பத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்தனர்.
அங்கு, நடேசன் தெருவை சேர்ந்தவர்களுக்கும் இரு வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடேசன் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், முஸ்லீம் ஒத்தவாடை தெருவில் உள்ள இளைஞர்கள் வீடுகளுக்கு சென்று இருவரையும் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒத்தவடை தெருவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், இளைஞர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

