ADDED : பிப் 02, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வளவ துரையன் எழுதிய 'தடம் பதித்த தமிழர்கள்' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா நடந்தது.
மீனாட்சி சுந்தரமூர்த்தி வரவேற்றார். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஜெயராமன், நுாலை வெளியிட செந்தில்முருகன் பெற்றுக் கொண்டார். நுாலாசிரியர் வளவ துரையன் ஏற்புரையாற்றினார்.
விழாவில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி எழிலேந்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஜானகிராஜா, புதுச்சேரி குறளிசைக் கூடு பொறுப்பாளர் சண்முகசுந்தரம், கல்வித்துறை எழுத்தர் சேதுராமன், மாவட்டத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் ரவி, எழுத்தாளர் ஆசைத்தம்பி, கவிஞர்கள் விடுதலை, வெற்றிச்செல்வி பங்கேற்றனர்.

