/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுக்குள் புகுந்த கார் மூதாட்டி பலி; சாலை மறியல்
/
வீட்டுக்குள் புகுந்த கார் மூதாட்டி பலி; சாலை மறியல்
வீட்டுக்குள் புகுந்த கார் மூதாட்டி பலி; சாலை மறியல்
வீட்டுக்குள் புகுந்த கார் மூதாட்டி பலி; சாலை மறியல்
ADDED : ஜன 19, 2024 08:14 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்ததால், மூதாட்டி இறந்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ராணி,60. இவர் நேற்று மாலை 6மணியளவில் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார்.
அப்போது தொழுதுாரிலிருந்து, திட்டக்குடி நோக்கிச்சென்ற மாருதி ஸ்விப்ட் கார், ஆ.பாளையம் மாரியம்மன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து ராணியின் வீட்டிற்குள் புகுந்தது.
இதில் வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்த ராணியின் மீது கார் மோதி அவர் அதே இடத்தில் இறந்தார்.
காரை ஓட்டிவந்தவர் தப்பி ஓடிய நிலையில், உடன் வந்தவர் படுகாயமடைந்தார்.
விபத்தைப்பார்த்த கிராம பொதுமக்கள், ராணி இறந்த ஆத்திரத்தில் ராமநத்தம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 6.15மணிக்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 6.45மணிக்கு போராட்டத்தைக் கைவிடச்செய்தனர்.
சாலைவிபத்து மற்றும் மக்கள் போராட்டத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

