/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து
/
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அவசியம் த.மா.கா., தலைவர் வாசன் கருத்து
ADDED : ஜன 14, 2024 06:03 AM
சிதம்பரம் : 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அவசியம் என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் அளித்த பேட்டி:
'இண்டியா' கூட்டணி, முரண்பாடின் மொத்த உருவமாக உள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதான எதிர்க்கட்சி மற்றும் பல கட்சிகள் பங்கேற்காதது, அவர்களது உண்மை முகத்தை மக்களிடம் பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் பெய்த கன மழையால் மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
போக்குவரத்து துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாதது, தொழிலாளர் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என த.மா.கா., கருதுகிறது.
தேர்தல் நெருங்கும்போது, உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். நாட்டில், 3வது முறையாக பா.ஜ., ஆட்சிக்கு வருவது பிரகாசமாக உள்ளது. தமிழக கவர்னர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு வாசன் கூறினார்.
இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, மாநில பொதுச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஜெயச்சந்திரன், புரட்சிமணி, நகர தலைவர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

