/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சகோதரர்களை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை
/
சகோதரர்களை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை
ADDED : ஜன 10, 2024 12:44 AM
கடலுார்: முன்விரோத தகராறில் சகோதரர்களை தாக்கிய வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடலுார் அடுத்த குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரசாத் திட்டினார்.
இதனை, இளையராஜாவின் தம்பி நாகராஜ், 32; தட்டிக்கேட்டார். அப்போது, பிரசாத் மற்றும் அவரது தரப்பினர் உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தடுக்க வந்த இளையராஜாவையும் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து பிரசாத், 28; குட்டியாங்குப்பம் பிரகலாதன், 26; முள்ளிகிராம் பட்டு விக்கி, 26; ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் (எண் 1) நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வனஜா, பிரகலாதனுக்கு 1 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பு கூறினார்.
பிரசாத் மற்றும் விக்கி இருவருக்கம் அபராதம் விதிக்கப்பட்டது.

