/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய பஸ் நிலையம் மாற்ற எதிர்ப்பு; கடலுாரில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
புதிய பஸ் நிலையம் மாற்ற எதிர்ப்பு; கடலுாரில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய பஸ் நிலையம் மாற்ற எதிர்ப்பு; கடலுாரில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய பஸ் நிலையம் மாற்ற எதிர்ப்பு; கடலுாரில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 28, 2025 05:36 AM

கடலுார் ; கடலுாரில் மாநகர புதிய பஸ் நிலையம் எம்.புதுாருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சி, குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொது நல அமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
வி.சி.க., மாநில அமைப்பாளர் திருமார்பன், செங்கதிர், செவ்வேந்தன், பழனிவேல், ரமேஷ், சீத்தா ராமன், மா.கம்யூ., மாநகர செய லாளர் அமர்நாத், சுப்ப ராயன், பக்கீரான், தண்டபாணி, குடியிருப்பு நல சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன், சிறப்பு தலைவர் மருதவாணன், இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், ம.தி.மு.க., வெங்கட்ராமன், ரமேஷ், இஸ்லாமிய கூட்டமைப்பு நகர செயலாளர் நசிருதீன், பொதுநல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி, சுப்புராயன், மனித நேய ஐனநாயக கட்சி மன்சூர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் மைய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். புதிய பஸ் நிலையம் எம். புதுார் அருகே மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.
கடலுார் மாநகராட்சியில் வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை வரியை அடாவடியாக வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.