/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நல்லுார்பாளையத்தில் பாரிவேட்டை திருவிழா
/
நல்லுார்பாளையத்தில் பாரிவேட்டை திருவிழா
ADDED : ஜன 19, 2024 08:11 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த நல்லுார்பாளையம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரிவேட்டை திருவிழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த நல்லூர்பாளையம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் தை மாதம் 4 ம் நாள் முன்னிட்டு பாரிவேட்டை திருவிழா நேற்று நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற புலி, சிங்கம், மான், குறவன், குறத்தி , காளி, அம்மன் , முருகன் போன்ற வேடங்கள் அணிந்து அங்கபிரதட்சணம் செய்து வேண்டுதல்லை நிறைவேற்றினர்.
பின் ஊரணி பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
இதில் திருத்துறையூர், ஒறையூர், கரும்பூர், பண்டரக்கோட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

