/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளைபோகும் ஆற்று மணல் கண்டுகொள்ளாத போலீஸ்
/
கொள்ளைபோகும் ஆற்று மணல் கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : ஜன 10, 2024 12:02 AM
புவனகிரி மருதூர் அருகே பரவனாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. தற்போது மழை தண்ணீர் தேங்கிய நிலையிலும் கூட இரவு நேரத்தில் மணல் திருட்டு ஜரூராக நடக்கிறது.
மணல் கொள்ளை நடக்கும் இடம் யார் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதில், மருதுார் மற்றும் குறிஞ்சிப்பாடி போலீசாரிடையே எல்லை பிரச்னை உள்ளது. இதனால், அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போலீசார் சிலரும் மணல் கொள்ளைக்கு உடந்தையொக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
புவனகிரி பகுதியில் நேர்மையான போலீசார் சிலர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகளின் ரகசிய உத்தரவு, அவர்களை கட்டுப்படுத்துகிறது.
இதனால், மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி கடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

